அவுங்க வீட்டு சமையல், இவுங்க வீட்டு சமையல்!! இப்போ ஜீ தமிழின் சமையல் எக்ஸ்பிரஸ்..
தொலைக்காட்சி சேனல்கள் போட்டி
தொலைக்காட்சி சேனல்களுக்கு இடையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு சேனலில் துவங்கும் நிகழ்ச்சியை மற்ற சேனல்களும் அதேபோல் காப்பி அடித்து ஆரம்பிப்பார்கள்.
அப்படி காமெடி, சிங்கர், டான்ஸ் என்று பல தொலைக்காட்சி சேனல்கள் போட்டிப்போட்டு ஒளிப்பரப்பு செய்கிறது. அந்தவகையில் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியை விஜய் டிவி ஆரம்பித்ததை போன்று சன் டிவியும் டாப் குக் டூப் குக் என்ற நிகழ்சியை போட்டுப்போட்டு நடத்தி வருகிறார்கள்.
சமையல் Express
தற்போது நாங்களும் சமையலுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் ஜீ தமிழும் ஒரு சமையல் நிகழ்ச்சியை துவங்கவுள்ளனர்.
நடிகை சீதாவை வைத்து சமையல் Express என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளனர். நிகழ்ச்சியில் பிரமோ வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.