விவாகரத்து பின் சைந்தவியுடன் பணியாற்றுவது ஏன்? ஜி.வி. பிரகாஷ் கூறிய பதில்
சமீபகாலமாக திரையுலக நட்சத்திரங்களின் விவாகரத்து குறித்த செய்தி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.
இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவாகரத்துக்கு பிறகும், இருவரும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஆனது நடைபெற்ற ஜி.வி. பிரகாஷின் பாட்டு கச்சேரியில் சைந்தவி பாடல்கள் பாடினார். அந்த வீடியோ கூட இணையத்தில் வைரலானது.
விவாகரத்துக்கு பிறகும் ஜீ.வி மற்றும் சைந்தவி இருவரும் ஒன்றாக பணியாற்றுவது ஆச்சர்யமாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வரும் நிலையில் அது ஏன் என ஜீ.வி.பிரகாஷே பதிலளித்து இருக்கிறார்.
"நாங்கள் ரொம்ப professional. ஒருவருக்கொருவர் மீது மரியாதையும் இருக்கிறது. அந்த மரியாதைக்காக நாங்கள் ஒன்றாக பணியாற்றுகிறோம்" என ஜி. வி பிரகாஷ் கூறியுள்ளார்.