விவாகரத்தாகிய ஒரு வாரத்தில் ஹன்சிகா மோத்வானி எங்கே போயிருக்காங்க தெரியுமா?

Hansika Motwani Punjab Divorce Tamil Actress Actress
By Edward Mar 18, 2026 07:55 AM GMT
Report

ஹன்சிகா மோத்வானி

மும்பையில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழில் தனுஷின் மாப்பிள்ளை, ரவி மோகனின் எங்கேயும் காதல், விஜய்யின் வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

விவாகரத்தாகிய ஒரு வாரத்தில் ஹன்சிகா மோத்வானி எங்கே போயிருக்காங்க தெரியுமா? | After Divorce Hansika Visit Golden Temple With Mom

ஒரே வருடத்தில் இப்படங்கள் வெளியாகி ஹன்சிகாவிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இதனையடுத்து சிம்பு, சூர்யா, விஷால், ரவி மோகன், ஆர்யா போன்ற நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையாக மாறினார்.

கடந்த 2022ல் தொழிலதிபர் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளான நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதன்பின் 2026 மார்ச் 11 ஆம் தேதி சோஹைலுக்கும் ஹன்சிகாவுக்கும் சட்டப்படி விவாகரத்து கொடுத்தது நீதிமன்றம். இந்நிலையில் விவாகரத்துக்குப்பின் நடிகை ஹன்சிகா, பஞ்சாப்பில் இருக்கும் கோல்டன் ரெம்பில் என்று கூறப்படும் பொற்கோயிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு தன்னுடைய அம்மாவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஹன்சிகா மோத்வானி.

GalleryGalleryGalleryGalleryGallery