என்னது நடிகை சமந்தாவுக்கு இரண்டாம் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா...

Samantha Marriage Divorce Tamil Actress Actress
By Edward Feb 09, 2024 03:30 AM GMT
Report

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை சமந்தா. இதனை தொடர்ந்து அதன் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா மிகப்பெரிய வரவேற்பை பெற்று தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

என்னது நடிகை சமந்தாவுக்கு இரண்டாம் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா... | After Divorce Samantha Second Marriage Groom

பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையாகினார். கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் தனியாக வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார்.

அதிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் சமந்தா படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி நடித்தும் வருகிறார். பாலிவுட் படத்தில் அறிமுகமாகியுள்ள சமந்தா கிளாமர் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா, தனியாக இருப்பதை நினைத்து அவரது வீட்டில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும்படி அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்.

மகள் தனியாக இருப்பதை விரும்பாத அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைவில் தங்களது நெருங்கிய உறவினர் வீட்டுப் பையன் இருவரை சமந்தாவுக்கு திருமண செய்து வைக்க முயற்சிகள் செய்து வருகிறார்களாம்.

ஆனால் இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்றும் மாப்பிள்ளை யார் என்கிற தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகினால் தான் உண்மை என்ன என்று தெரியவரும். அதே சமயம் நடிகை சமந்தா திருமணம் குறித்து சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள கருத்தும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Gallery