விஜய்யின் இந்த படத்தால் 6 வருடமாக காணாமல் போன இயக்குநர்! ஆனால் இப்போ!

vijay puli simbudebvan kasadathapara
By Jai Aug 27, 2021 09:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். பிகில், மாஸ்டர் வெற்றியை கண்டாலும் அதற்கு முன் சில தோல்வி படங்களை கொடுத்து வந்தார்.

விஜய் கேரியரில் படுமோசமாக கருதப்பட்ட படம் புலி. இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான சில நாட்களிலேயே விமர்சன ரீதியாக படுதோல்வியடைந்தது. அப்போனவர் தான் இயக்குநர் சிம்பு தேவன். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற நல்ல நல்ல படங்களை எடுத்த சிம்புதேவன் எடுத்திருந்தார்.

இதையடுத்து 24 ஆம் புலிகேசி சில காரணங்களால் விடுபட்டது. இதையடுத்து ஒருவழியாக கசடதபற படம் வெளியாகி சிம்புதேவனுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்து வருகிறது. படம் பார்த்த அனைவருமே படம் சூப்பராக இருப்பதாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றிக்காகத்தான் ஆறு வருடங்கள் போராடினேன் என தன்னுடைய வட்டாரங்களில் கூறி வருகிறார்களாம்.