ரியாவை தொடர்ந்து இவரும் ராஜா ராணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.. விஜய் டிவியின் சதியா
Star Vijay
Serials
Tamil TV Serials
By Kathick
ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசாவிற்கு பதிலாக நடிக்க வந்தவர் நடிகை ரியா. இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியிருந்தார்.
இந்நிலையில், நடிகை ரியாவை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலை இயக்கி வரும் இயக்குனர் பிரவீன் கூட சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக இனி புதிய இயக்குனர் ரமேஷ் பாரதி என்பவர் தான் ராஜா ராணி 2 சீரியலை இயக்கப்போகிறாராம்.
இப்படி தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலின் முக்கிய தூண்கள் வெளியேறுவது பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதாவது இவர்களே வெளியேறுகிறார்களா? அல்லது விஜய் டிவி அழுத்தம் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறார்களா? என்று.