கருப்பாக மாறிய முகம்!! தனுஷை பிரிந்த 1 வருடத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ரஜினிகாந்த் மகள்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக இருந்து நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இயக்குனராக அவதாரம் எடுத்து கணவரை வைத்து 3 படத்தினை இயக்கினார் ஐஸ்வர்யா.
அதன்பின் தனுஷுடன் 18 ஆண்டுகள் வாழ்ந்து இரு ஆண் மகன்களை பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர்.
இதுவரை இதற்கான காரணம் என்ன என்று வெளிப்படையாக தெரியாத நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்து வருகிறார்.
தனுஷை பிரிந்தப்பின் உடற்பயிற்சி, சைக்கிளிங் என்று இருந்து வந்த ஐஸ்வர்யா, தன் அப்பா ரஜினிகாந்தை வைத்து சிறப்பு தோற்றத்தில் லால் சலாம் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் பல வேலைகளை பார்த்து ஓய்வில்லாமல் இருந்த ஐஸ்வர்யா கருப்பாக மாறி முகம் அப்படியே மாறி ஆள் அடையாளம் தெரியாமல் போயுள்ளார். அவரது சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.



