6வது முறையாக 41 வயது நடிகையுடன் இணையும் அஜித்.. யார் அந்த நடிகை தெரியுமா

Ajith Kumar Trisha VidaaMuyarchi
By Kathick Sep 02, 2024 03:56 AM GMT
Report

அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் விடாமுயற்சி படத்தில் திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஏற்கனவே திரிஷாவுடன் இணைந்து மங்காத்தா, கிரீடம், ஜீ மற்றும் என்னை அறிந்தால் ஆகிய படங்களில் அஜித் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து ஐந்தாவது முறையாக விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.

6வது முறையாக 41 வயது நடிகையுடன் இணையும் அஜித்.. யார் அந்த நடிகை தெரியுமா | Again Ajith Going To Pair Up With Trisha

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் மீண்டும் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம் திரிஷா. இதன்மூலம் 6வது முறையாக இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

விடாமுயற்சி படப்பிடிப்பின் போது திரிஷாவின் டெடிகேஷன் மற்றும் தேவைப்பட்ட நேரத்தில் எல்லாம் கால்ஷீட் ஒதுக்கி கொடுத்தது எல்லாம் அஜித்தின் கவனத்தை ஈர்த்துள்ளதாம். இதனால் குட் பேட் அக்லி படத்தில் கதாநாயகியாக திரிஷாவை நடிக்க வைக்க அஜித் தான் பரிந்துரை செய்துள்ளார் என சொல்லப்படுகிறது.