பிரபல இயக்குனரை தாக்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்.. என்ன வார்த்தை சொன்னார் தெரியுமா
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, பட வாய்ப்புகளை பெற்றவர் அஸ்வின் குமார். இவர் நடிப்பில் என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. எதிர்பார்ப்புக்குறிய இப்படம் படுதோல்வியடைந்தது.
அதற்க்கு காரணமே நடிகர் அஸ்வினின் பேச்சு தான். ஆம், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நான் 40 இயக்குனர்களிடம் 40 கதை கேட்டேன். அந்த அணைத்து கதைகளையும் கேட்கும் போது தூக்கம் வந்துவிட்டது என்று பேசியிருந்தார். இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவே இப்படத்தின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த வெப் சீரிஸ் 'தமிழ் ராக்கர்ஸ்'. இந்த வெப் சீரிஸில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில், தனது மகனுக்கு சினிமா வாய்ப்பு கேட்டு போட்டோ ஒன்றை கொடுப்பார் அப்போது இடம்பெறும் வசனம் 'சார் இவன் பெயர் அஸ்வின் குமார், அவனே அவன AK-னு சொல்லிபான். போட்டோல பார்த்தா தூங்குன மாதிரிதான் இருப்பான். ஆனா நேர்ல நல்லா இருப்பான்' என்று ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும்.
Ak அஸ்வின் சரமாரியாக தாக்கப்பட்டார். #Varisu pic.twitter.com/GnQ8gw9OgM
— 彡Mr ????? ?⚡️ (@itz__Beast) August 21, 2022
இதை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்த காட்சி அஸ்வின் குமாரை தான் குறிக்கிறது என்று ட்ரோல் செய்து வருகிறார்கள். இதற்க்கு பதிலளிக்கும் விதமாக அஸ்வின் தனது இன்ஸ்டாகிராமில் 'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸின் இயக்குனர் அறிவழகனை மறைமுகமாக தாக்கி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதில் 'தாங்கள் பிரைன் பியூட்டி (அறிவழகன்) கிடையாது, பிரைன் லெஸ் பியூட்டி (அறிவில்லாதவன்) என்று நிரூபித்துள்ளீர்கள். சார் ரிவியூஸ் பாத்திருப்பாருன்னு நம்புறேன். புரிஞ்சவன் பிஸ்தா' என்று பதிவு செய்துள்ளார்.

இதை கவனித்த ரசிகர்கள் அஸ்வின் குமார் மறைமுமாக இயக்குனர் அறிவழகனை தான் தாக்கியுள்ளார் என்று கூறி வருகிறார்கள். இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக சென்று கொண்டிருக்கிறது.