அதனால் குடும்பத்தை ரொம்ப திட்டுனாங்க, முழுக்க முழுக்க நெகட்டிவ்!! ஐஷு அப்பா ஓபன் டாக்

Kamal Haasan Bigg Boss Pradeep Anthony
By Dhiviyarajan Feb 14, 2024 02:30 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்துகொண்ட ஐஷு, ஆரம்பத்தில் அருமையாக விளையாடினாலும் நாட்கள் செல்ல நிக்சன் உடன் சேர்ந்து ரொமான்ஸில் ஈடுபட்டார். இதனால் அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி பிரதீப்கு எதிராக ரெட் கார்ட் தூக்கியதால் அவர் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. .

அதனால் குடும்பத்தை ரொம்ப திட்டுனாங்க, முழுக்க முழுக்க நெகட்டிவ்!! ஐஷு அப்பா ஓபன் டாக் | Aishu Dad Talk About Negative Comments

சமீபத்தில் பேட்டியில் கலந்துகொண்ட ஐஷுவின் அப்பா, "நான் ஐஷுவை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என்று சொன்னேன். ஒரு கட்டத்தில் ஐஷு பிடிவாதமாக இருந்த காரணத்தினால் அனுமதி கொடுத்தேன்".

"என்னுடைய குடும்பத்தில் எல்லாரும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறோம். இத்தனை ஆண்டுகளாக எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனத்தையும் எதிர்கொண்டது இல்லை. ஆனால் ஐஷு பிக் பாஸ் சென்ற பின்பு எங்களுடைய வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. முழுக்க முழுக்க நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே".

"ஒரு போட்டியாளரை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்த நபரை விமர்சிக்கலாம் ஆனால் அவருடைய குடும்பத்தை சேர்த்து விமர்சிப்பது ரொம்பவே தவறானது. எங்களுடைய குடும்பம் மனஉளைச்சலில் இருந்தது" என்று ஐஷுவின் அப்பா கூறியுள்ளார்.