காமெடி நடிகர் மகனுடன் காதலில் மகள்!! விசயம் பெருசானதால் அர்ஜுன் எடுத்த முடிவு..
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் என்று புகழப்படும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன். தற்போது லியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் அர்ஜுன் தன் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனை சினிமாவில் நடிக்க அறிமுகப்படுத்தினார்.
அவர் நடித்த படங்கள் அவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை. தற்போது 5 ஆண்டுகளாக வாய்ப்பில்லாமல் குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டும் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
சில தினங்கலுக்கு முன் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகனுக்கு திருமணம் விரைவில் நடிக்கவுள்ள என்ற செய்தி வைரலானது. தற்போது அதற்கான முழு தகவலும் லீக்காகியுள்ளது.
தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற காலத்தில் இருந்தே, ஐஸ்வர்யா அர்ஜுனுடன் காதலில் இருந்து வந்துள்ளாராம். தங்கள் காதலை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பார்த்து வந்த நிலையில் காதல் பற்றி இரு குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.
ஆனால் அதற்கு அர்ஜுனும், தம்பி ராமையாவும் ஏற்க மறுக்கவில்லையாம். இருவரும் பிள்ளைகளின் காதலை ஏற்றுக்கொண்டதோடு வரும் 2024 தை மாதம் திருமணம் செய்து வைக்கவும் முடிவெடுத்திருக்கிறார்களாம்.