விவாகரத்துக்கு பின் ஆளே மாறிய ஐஸ்வர்யா!! தனுஷை பிரிந்தது இப்படியொரு மாற்றம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். திருமணத்திற்கு பின் தனுஷின் மிகப்பெரிய உச்சம் அடைய காரணமாக இருந்து வந்த ஐஸ்வர்யா 3 படத்தினை இயக்கி சூப்பட் ஹிட் கொடுத்தார்.
அதன்பின் 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் வளர்ந்த நிலையில் தனித்தனியாக பிரிந்து வாழ்வதாக கூறி அறிக்கை வெளியிட்டனர். இருவரும் தங்கள் வேலையில் பிஸியாகவும் மகன்களுடன் கிடைத்த நேரத்தை செலவிட்டும் வந்தனர்.
தனுஷுடன் வாழ்ந்து வந்த போது ஐஸ்வர்யா சேலையில் அடக்கவுடக்கமாக இருந்தும் இணையத்தில் எப்போவாது ஒரு பதிவினை பகிர்ந்து வந்தார்.
ஆனால் தனுஷை பிரிந்தப்பின் ஜிம் ஒர்க்கவுட், மாடர்ன் ஆடை, சைக்கிளிங் என்று ரசிகர்களை அண்ணார்ந்து பார்க்கும் அளவிற்கு புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் தனுஷை பிரிந்ததும் அப்படியே ஆளே மாறிவிட்டார் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஐஸ்வர்யா தன் வேலையை செய்து வருகிறார்.