மகன்கள் விஷயத்தில் தனுஷுக்கு கண்டீசன் போட்டுள்ளார ஐஸ்வர்யா? புகைப்படத்தால் ஏற்பட்ட பிரச்சனை..

Dhanush Aishwarya Rajinikanth
By Edward May 21, 2022 08:59 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 18 வருடங்களுக்கு பிறகு பிரிந்துள்ளார். இச்செய்தி திரையுலகை அதிரவைத்த நிலையில் பலர் சமாதானம் பேசியும் இருந்தும் இருவரும் கேட்கவில்லை.

தற்போது தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். சுதந்திர பறவையாக மாறிய தனுஷின் மாஜி மனைவி உடற்பயிற்சி உள்ளிட்ட பல வீடியோக்கள் புகைப்படங்களை ஒருநாள் விடாமல் வெளியிட்டு வருகிறார்.

தனுஷ் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய இரு மகன்களை சந்தித்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தார். தற்போது அதற்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளார் ஐஸ்வர்யா. ஒருமுறை தனுஷ் இளையராஜா நிகழ்ச்சிக்கு அழைத்து சென்ற நிகழ்வு இணையத்தில் வைரலானது.

ஆனால் ஐஸ்வர்யாவுடன் மகன்கள் எடுத்த புகைப்படம் பெரியளவில் பிரபலமாகவில்லை. அதிலும் மகன்களுக்கு அப்பாவுடன் இருப்பதே பிடிக்கும் மனநிலையில் இருக்கிறார்களாம். இதனால் கடுப்பான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுக்கு ஏகப்பட்ட கண்டீசன்களை போட்டுள்ளாராம்.

மகன்களை சந்திக்கும் போது போட்டோக்கள் எதுவும் எடுக்கக்கூடாது என்றும் அப்படி எடுத்தால் சமுகவலைத்தளத்தில் பகிரக்கூடாது என்றும் கூறியிருக்கிறாராம்.

இதற்கு வேறுவழி இல்லாமல் தனுஷ் ஒப்புக்கொண்டதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த செய்து எந்தளவிற்கு உண்மை என்பது தனுஷ் மகன்களை சந்திக்கும் போது தான் தெரியவரும்.