இந்த வயசுல இதெல்லாம் தேவையா!! ரஜினிகாந்த் மிரட்டியதால் ஜெயிலர் ஆடியோ லான்சிற்கு வராத ஐஸ்வர்யா..

Rajinikanth Aishwarya Rajinikanth Gossip Today Jailer Soundarya Rajinikanth
By Edward Aug 02, 2023 09:30 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக இருந்து நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா. கடந்த 2004ல் திருமணமாகி கணவர் தனுஷுக்கு உறுதுணையாக இருந்த ஐஸ்வர்யா 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிடுவதாக அறிவித்தார். இரு மகன்கள் இருக்கும் நிலையில் இருவரும் பிரிவதாக அறிவித்த விசயம் மிகப்பெரியளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இருவரும் பிரிய பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது.

ஆனால் இருவரும் இன்றுவரை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்ய அனுகவில்லை என்றும் கூறப்பட்டது. தனுஷை பிரிந்தப்பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா, தன் அப்பா ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் லால் சலாம் படத்தினை இயக்கி வருகிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை பிரிந்து ஒரு வருடமாகிய நிலையில் ஒரு இளம் இயக்குனரை 2ஆம் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் திருமணம் செய்யவுள்ள செய்தி ரசிகர்களிடம் பல கேள்விகளை எழுப்பி வருகிறது.

இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகளுடன் ஏற்பட்ட பிரச்சனை பற்றி பகிர்ந்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் சில தினங்களுக்கு முன் மாலத்தீவிற்கு செல்லும் போது மகள் ஐஸ்வர்யாவை உடன் அழைத்துச்செல்லவில்லை என்றும் ரஜினிக்கு அவர் மீது கோபம் இருப்பதால் தான் ஐஸ்வர்யாவை விட்டுச்சென்று விட்டார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதற்கு காரணம் தனுஷை பிரிந்திருக்கும் நிலையில் லால் சலாம் படத்தின் உதவி இயக்குனரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் ரஜினியிடம் கூறியதால் கோபத்தில் இருந்திருக்கிறார். இதனால் தான் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஐஸ்வர்யா செல்லவில்லையாம்.

இரண்டாம் மகள் செளந்தர்யா வந்திருக்கும் நிலையில் ஐஸ்வர்யா ஏன் வரவில்லை என்ற சந்தேகமும் அதிகரித்து வந்தது. ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று ஜெயிலர் ஆடியோ லான்ச் முடிந்ததும் ஐஸ்வர்யா, அப்பா ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.