திருமணமில்லாத உறவு இருந்தா நல்லது!! ஷாக் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..

Aishwarya Lekshmi Gossip Today Marriage Relationship Tamil Actress
By Edward Mar 17, 2026 12:00 PM GMT
Report

ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் ஆக்‌ஷன், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இதனையடுத்து, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து டாப் நடிகையாக மாறினார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் மாமன், தக் லைஃப் போன்ற படங்களில் நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமி, சோசியல் மீடியா பக்கங்களில் இருந்து விலகி இருந்து வருகிறார்.

திருமணமில்லாத உறவு இருந்தா நல்லது!! ஷாக் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.. | Aishwarya Lekshmi Open About Marriag Relationship

தற்போது கட்டா குஸ்தி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஐஸ்வர்ய லட்சுமி அளித்த பேட்டியொன்றில், திருமண உறவு குறித்து பகிர்ந்துள்ளார்.

திருமணமில்லாத உறவு

அதில், எனக்கு கல்யாணம் பண்ணும் ஐடியாவே இல்லை. வாழ்க்கை துணைன்னு ஒன்று வேண்டும் தான், ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து வாழும்போது இருவருக்குமே நிம்மதி இல்லாத ஒரு நிலை வரக்கூடாது. அதனால் திருமணம் எதுவும் பண்ணாமல், உறவில் இருக்கிறது நல்லது என்று தெரிவித்துள்ளார்.