ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்கிறாரா? முற்றுப்புள்ளி வைத்த அபிஷேக் பச்சன்
பாலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன். இந்த தம்பதியருக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்..
கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா அபிஷேக் ஜோடி விவாகரத்து செய்ய போவதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் இதுகுறித்து இருவரும் கண்டுக்கொள்ளவே இல்லை.
மேலும் அம்பானி வீட்டு திருமணத்தில் அபிஷேக் பச்சன் தனது பெற்றோருடன் திருமணத்தில் கலந்துகொண்டார். ஐஸ்வர்யா ராய் பச்சன் தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் தனியாக பங்கேற்றார். ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மாமியார் குடும்பத்துடன் ஒதுங்கியிருந்த வீடியோக்கள் வைரலானது.
இந்நிலையில் பிரபல புகைப்படக் கலைஞர் யோகன் ஷா தனது இன்ஸ்டாகிராமில் அபிஷேக் வாங்கியுள்ள புதிய காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு, " அபிஷேக் பச்சன் தன்னுடைய புதிய காரில் தனது மனைவி ஐஸ்வர்யா ராயின் விருப்பமான நம்பர் பிளேட்டைப் வைத்து இருக்கிறார்" என்று யோகன் ஷா தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்தி வெறும் வதந்தியே என்று தெரியவந்துள்ளது.
You May Like This Video