காதல் கணவரால் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக மறுத்த ஐஸ்வர்யா ராய்.. காரணம் இதுதானாம்..

Aishwarya Rai Shah Rukh Khan Gossip Today Bollywood Abhishek Bachchan
By Edward Aug 26, 2024 01:30 PM GMT
Report

ஐஸ்வர்யா ராய்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து 2014ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற படம் ஹேப்பி நியூ இயர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடித்திருப்பார். அவரின் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை ஐஸ்வர்யா ராய் தானாம்.

ஃபரா கான் ஐஸ்வர்யா ராயிடம் கேட்க, காதல் கணவரான அபிஷேக் பச்சனும் அப்படத்தில் நடிப்பதால் அவருக்கு ஜோடியாக தான் தன்னை நடிக்க வைக்க விரும்புகிறார் ஃபரா கான் என்று ஐஸ்வர்யா ராய் நினைத்துள்ளார்.

காதல் கணவரால் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக மறுத்த ஐஸ்வர்யா ராய்.. காரணம் இதுதானாம்.. | Aishwarya Rai Bachchan Said No To Shah Rukh Khan

ஹேப்பி நியூ இயர்

இதுகுறித்து ஃபரா கானிடம், அபிஷேக்கிற்கு ஜோடியாக தானே என்று கேட்க, இல்லை ஹீரோ ஷாருக்கானுக்கு ஜோடி என்று கூறியிருக்கிறார்.

அதற்கு ஐஸ்வர்யா ராயோ, சாரி ஃபரா, நான் ஹேப்பி நியூ இயர் படத்தில் நடிக்கமாட்டேன், அபிஷேக்கிற்கு ஜோடியக நடிக்கவே விரும்புகிறேன், நீங்கள் வேறு யாரையாவது நடிக்க வையுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதன்பின்தான் தீபிகா படுகோனை நடிக்க வைத்துள்ளனர். இதனை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.