ரூ. 4100 கோடி வசூல்!! பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்..
ஐஸ்வர்யா ராய்
உலக அழகி பட்டத்தை வென்று தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இப்படம் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து, இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து மிகமுக்கிய நடிகையாக திகழ்ந்து வந்தார்.
அபிஷேக் பச்சனை திருமணம் செய்து ஒரு மகளை பெற்றெடுத்த ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். பாலிவுட் சினிமாவிலும் நடித்துள்ள ஐஸ்வர்யா பிரபல பாலிவுட் நடிகருடன் ஜோடியாக நடிக்க மறுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
பிராட் பிட்
ஸ்கிரிப்களில் கவனம் செலுத்தி நடிக்கும் ஐஸ்வர்யா ராய், பாப்புலர் நடிகரான பிராட் பிட்டுடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தான் மறுத்திருக்கிறாராம்.
படத்தின் ஸ்கிரிப்டில் சில காட்சிகள் சங்கடமாக உணர்ந்ததால் தான் அதில் நடிக்க மறுத்துவிட்டதாக ஐஸ்வர்யா ராயே பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். மறுத்த ஐஸ்வர்யா ராய்க்கு பதில் பாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு வாய்ப்பு சென்றுள்ளது.
2005ல் வெளியான மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித் படம் வெளியாகி சுமார் 4100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/dbbc658e-e41c-449c-a495-63f3d92368dd/25-67aef2275deb3.webp)