தளபதியை ரிஜெக்ட் செய்ய ஐஸ்வர்யா ராய் சொன்ன காரணம்!! உலக அழகியை தட்டித்தூக்கிய இயக்குனர்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5 ரிலீஸ் ஆகவிருக்கும் நிலையில் விஜய் பற்றிய பல தகவல்கள் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. விஜய்யின் ஆரம்பக்கட்ட சினிமாவில் பல பாலிவுட் நடிகைகள் அவர் படத்தின் அறிமுகமாகி டாப் இடத்தினை பிடித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் கூட அவர் நடிக்கும் படங்களில் மற்ற மொழி நடிகைகளான ராஷ்மிகா மந்தனா, மாளவிகா மோகனன், மீனாட்சி செளத்ரி போன்ற நடிகைகள் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்திருக்கிறார்கள். அப்படி முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் விஜய் படத்தினை ரிஜெக்ட் செய்திருக்கிறார் என்ற தகவல் பகிரப்பட்டு வருகிறது.
விஜய்க்கு எப்படியாவது நடிகை ஐஸ்வர்யா ராயுடன் நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. அப்படி தமிழன் படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது.
ஆனால் ஐஸ்வர்யா ராய் நான் விஜய்யுடன் எல்லாம் நடிக்க மாட்டேன், தன்னைவிட சின்னப்பையனாக ஸ்கிரீனில் தெரிவார் என்ற காரணத்தையும் கூறியுள்ளார். பின் ஒரு வழியாக விஜய் இடம் பேசி அந்த உலக அழகி இல்லை என்றால் என்ன சமீபத்தில் உலக அழகி பட்டம் பெற்ற உலக அழகி பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்கிறோம் என்று கூறி அவரை நடிக்க வைத்திருக்கிறார்.