நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமா? வயிற்றை மறைத்து மகளுடன் சென்ற வைரல் வீடியோ..

Aishwarya Rai Pregnancy Indian Actress
By Edward Jul 21, 2022 02:36 AM GMT
Report

1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வாகிய பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இதன்பின் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக இயக்குனர் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார் ஐஸ்வர்யா. இதன்பின் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றும் பல கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ஒருசில படங்களில் நடித்தும் வந்தார். அதன்பின் ஆரத்யா பச்சன் என்ற மகளை பெற்றெடுத்த ஐஸ்வர்யா சினிமாவில் இருந்து சற்று விலகினார்.

பின் குழந்தை பார்த்துக்கொண்ட ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

விமான நிலையத்தில் கணவர் மற்றும் மகளுடன் சென்ற போது எடுத்த வீடியோ ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கையால் வயிற்றை மறைத்த படி சென்றுள்ளார். இதனை வைத்து ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறார் என்று ஊடகத்தில் செய்திகள் பரவி வருகிறது.