மாடர்ன் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!! புகைப்படங்கள்..
ஐஸ்வர்யா ராஜேஷ்
1995ல் ரம்பண்டு என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறப்பு பாடலுக்கு நடித்து, 2010க்கு பின் சிறுசிறு ரோலில் நடித்து பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அதனையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, ஆறாது சினம், மனிதன், தர்மதுறை, கடலை, மோ, கட்டப்பாவ காணோம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

அவர் நடிப்பில் மிகப்பெரிய பெயரை கொடுத்த படமாக காக்கா முட்டை, வடசென்னை, கனா போன்ற படங்கள் கொடுத்தது. இதனையடுத்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வந்தார்.
தற்போது தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்தும் வருகிறார். ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான நடிகையாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது நிஜ வாழ்க்கையிலும் மாடர்ன் லுக்கிற்கு மாறியிருக்கிறார்.

Isakapatnam வெப் தொடர்
சமீபத்தில், அமேசான் பிரைமில் வெளியாகும் வெப் தொடர்கள் மற்றும் படங்களின் அறிவிப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. நிகழ்ச்சிக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்றுள்ளார். அவர் நடிப்பில் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள Isakapatnam வெப் தொடரும் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மார்டன் லுக்கில் சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.