மது பாரில் இரவு பார்ட்டி!! பிரபல நடிகருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா..
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அட்டக்கத்தி படத்தில் அமுதா ரோலில் தமிழில் நடிகையாக நடித்தும் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இப்படத்தினை தொடர்ந்து, புத்தகம், ரம்மி, காக்கா முட்டை, ஆறாது சினம், மனிதன், குற்றமே தண்டனை, லட்சுமி, செக்க சிவந்த வானம், வட சென்னை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
இதனை தொடர்ந்து கனா, வானம் கொட்டட்டும், பூமிகா, ரிபப்ளிக், டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, தீரா காதல் போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களில் நடித்து வந்தார்.
அடக்கவுடக்கமாக கிராமத்து நடிகையாகவும் திகழ்ந்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கிளாமர் லுக்கிற்கும் மாறியிருக்கிறார். சமீபத்தில் அவரது 34 வது பிறந்தநாளை கொண்டாடி நண்பர்களுக்கு இரவு பார்ட்டி கொடுத்திருக்கிறார்.
மது பார்ட்டியில் பல நடிகைகள் நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் நடிகர் அர்ஜுனும் கலந்து கொண்டு ஐஸ்வர்யா மற்றும் ஆண்ட்ரியாவுடன் புகைப்படத்தை எடுத்து கொண்டது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.







