20 வயதில் தற்கொலை செய்து கொண்ட மூத்த மகன்!! எமோஷ்னலாகிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா..

Aishwarya Rajesh Viral Video Gossip Today
By Edward May 16, 2023 10:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு காக்கா முட்டை, வடசென்னை, கனா உள்ளிட்ட பல படங்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இப்படங்களுக்கு பின் சோலோ நடிகையாக பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தன்னுடைய அம்மா எப்படி எங்களை வளர்த்தார்கள் என்று எமோஷ்னலாக சமீபத்தில் கூறியிருந்தார்.

20 வயதில் தற்கொலை செய்து கொண்ட மூத்த மகன்!! எமோஷ்னலாகிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா.. | Aishwarya Rajesh Mother Opens About Her Son Death

ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா நாகமணி

சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவுக்கு ஆளுநர் ஒரு விருதினை வழங்கி இருந்தார். இந்நிலையில் அன்னையர் தினத்தன்று ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா மற்றும் அவரது அண்ணன் மணிகண்டன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்து பேசியுள்ளனர். அதில் ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா நாகமணி, பல எமோஷ்னல் சம்பவங்களையும் மகன்கள் இறப்பு குறித்தும் பேசியுள்ளார்.

என் கணவர் இறந்தப்பின் நான்கு பக்கமும் கஷ்டப்பட்டு நான்கு பிள்ளைகளை வளர்த்தேன். முதல் பையன் வலது கையுமாகவும் இரண்டாம் மகன் இடது கையுமாகவும் மணிகண்டா பரவாயில்லை என்றும் ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்து அனுப்பிவிடலாம் என்றும் நினைத்தேன். ஆனால் முதல் மகன் மரணமடைந்த போது ஒரு கை இழந்தும் ரெக்கையை இழந்தது போல் உணர்ந்தேன்.

20 வயதில் தற்கொலை செய்து கொண்ட மூத்த மகன்!! எமோஷ்னலாகிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா.. | Aishwarya Rajesh Mother Opens About Her Son Death

மகன் எப்படி இறந்தார்கள்

அது சரியாக நன்றாக சென்றபோது இரண்டாம் மகன் விபத்தில் இறந்துவிட்டான். அதன்பின் மணிகண்டா 25 ஆயிரம் சம்பாதித்து கொண்டிந்தது உதவியது. மகன் எப்படி இறந்தார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அம்மா நாகமணி, முதல் மகன் 20 வயதில் தற்கொலை செய்து இறந்துவிட்டார், இரண்டாம் மகன் நண்பர்களோடு போனபோது விபத்தில் இறந்துவிட்டான் என்று கூறியுள்ளார். குடும்ப பிரச்சனையில் ஏதாவது அழுத்தமா என்று கேட்டதற்கு அதெல்லாம் இல்லை காதல் தான் என்று எமோஷ்னலாக தெரிவித்துள்ளார்.