நிறைய பேர் அப்படித்தான் பேசுவாங்க..நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த அட்வைஸ்..

Aishwarya Rajesh Salem Actress
By Edward Feb 22, 2026 09:45 AM GMT
Report

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவை தாண்டி தற்போது தெலுங்கு மொழியிலும் கவனம் செலுத்தி டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

சமீபத்தில் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் 28 ஆம் ஆண்டு கல்வி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா. நிகழ்ச்சியில் நடனமாடிய பின் மாணவ மாணவிகள் மத்தியில் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நிறைய பேர் அப்படித்தான் பேசுவாங்க..நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த அட்வைஸ்.. | Aishwarya Rajesh Motivate Speech Before Students

அப்போது, நான் சினிமா வாழ்க்கைக்கு வரவில்லை என்றால் திருமணம் செய்திருப்பேன். வாழ்க்கையில் தோல்வி வந்தால் அதை கண்டு நொந்துவிடாமல் அடுத்தடுத்து நம் பயணத்தை நோக்கிச்சென்று கொண்டே இருக்க வேண்டும்.

நம்மைப்பற்றி பேசிக்கொண்டிருப்பவர்கள் பேசட்டும், நம்மை நிறைய பேர் சுற்றிசுற்றி புரளி பேசுவார்கள், அவர்கள் பேசிட்டு போகட்டும். அதனை எதுவும் காதில் வாங்காமல் நாம் முன்னாடி போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

நிறைய பேர் அப்படித்தான் பேசுவாங்க..நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த அட்வைஸ்.. | Aishwarya Rajesh Motivate Speech Before Students

கல்லூரி வாழ்க்கை கிடைப்பது அரிது. அதை சந்தோஷமாக மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். படிப்பு முக்கியம், நம் வாழ்க்கையில் முடியாது என்று யாராவது சொன்னால், நம்பாமல் நம்மால் கட்டாயம் முடியும் என்று ஜெயித்து காண்பிக்கலாம். எதுவுமே முடியாது என்று நினைக்காதீர்கள் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருக்கிறார்.