அந்தமாதிரி நடிகையா மட்டும் பண்ணாதீங்க? ஐஸ்வர்யாவுக்கு கண்டீசன் போடும் ரசிகர்கள்..

Aishwarya Rajesh Indian Actress
By Edward Jul 04, 2022 06:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பல ஆண்டுகளாக நடிகையாக இருந்து வரும் ஐஸ்வர்யாவின் சினிமா கேரியருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் காக்கா முட்டை.

தேசிய விருது வாங்கிய இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இப்படத்தினை அடுத்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.

பாடல் மற்றும் காதல் காட்சிகளுக்கு மட்டுமே கதாநாயகிகளை படத்தில் வைத்திருக்கும் மத்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்வு செய்யும் படங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து வருகிறது. அப்படி வடசென்னை, தர்மதுறை, கனா உள்ளிட்ட படங்கள் வேறுமாதிரியான தோற்றத்தை ஐஸ்வர்யாவுக்கு கொடுத்துள்ளது.

இதை அப்படி பயன்படுத்தி கிராமத்து மற்றும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கையாக கூறி வந்துள்ளனர்.

சமுகவலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் இப்படியான கேள்வியை கேட்ட ரசிகர்களுக்கு சரி என்று பதிலளித்துள்ளாராம்.


Gallery