விவாகரத்துக்கு பின் வெறித்தனமான உடற்பயிற்சி!! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதன்பின் கணவருக்கு ஆறுதலாக இருந்து வந்த ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார்.

பிரிந்து வாழ்வதில் உறுதி
அதன்பின் ஒருசில படங்களை தயாரித்தும் இயக்கியும் வந்தார். யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கும் நிலையில் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிடுவதாக ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் அறிக்கை மூலம் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். ரஜினிகாந்த் உட்பட பலர் அறிவுரை கூறியும் கேட்காமல் பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருந்து தங்கள் வேலைகளை கவனித்தும் கிடைக்கும் நேரத்தில் மகன்களுக்காக நேரத்தை செலவிட்டும் வருகிறார்கள்.
உடற்பயிற்சி
ஐஸ்வர்யா தன் பங்கிற்கு தற்போது லால் சலாம் என்ற படத்தினை இயக்க பூஜையும் போட்டுள்ளார். விஷ்ணுவிஷால், விக்ரந்த் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவுள்ளார். இப்படி செல்கையில் ஐஸ்வர்யா இணையத்தில் ஆக்டிவாக இருந்து சைக்கிளிங், உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இன்று ஞாயிற்று கிழமை இரவு வெறித்தனத்துடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.