வீட்லயே ஜிம்மா யாரும் காணோம்.. ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவின் ஒர்க்கவுட் வீடியோ எடுப்பது இவர் தான்..

Aishwarya Rajinikanth
By Edward Aug 27, 2022 06:07 PM GMT
Report

ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 18 வருட காதல் திருமண வாழ்க்கையில் யாத்ரா, லிங்கா என்ற இருமகன்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதுகுறித்து எங்கும் பேசாமல் வருகிறார்கள் இருவரும். தங்கள் பணிகளில் மும்முரமாக வேலை செய்யும் இருவரும் கிடைக்கும் நேரத்தில் மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். விவாகரத்துக்கு பின் இயக்கத்தில் குதித்த ஐஸ்வர்யா தற்போது கேமராவோடு தான் எங்கயும் வைத்துக்கொண்டு தான் சுற்றுகிறாராம்.

சைக்கிளிங் சென்றாலும் சரி, கோவிலுக்கு சென்றாலும் சரி அதை எடுத்து இணையத்தில் பகிர்ந்து விடுகிறார். சமீபத்தில் அவர் ஜிம் ஒர்க்கவுட்டின் போது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

யாருமே இல்லாத ஜிம்மில் நீங்கள் மட்டும் அதுவும் கேமரா மேன் யார் எடுப்பது என்ற கேள்வி எல்லாம் எழுந்தது. சூப்பர் ஸ்டார் மகளின் அவ்வளவு பெரிய வீட்டில் ஜிம் கூடவா அமைத்திருக்க மாட்டார் என்ற கேள்வியும் ஐஸ்வர்யா வெளியிடும் வீடியோவில் இருப்பது யார் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.