வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வீடியோ..

Rajinikanth Aishwarya Rajinikanth Tamil Directors
By Edward Sep 07, 2024 09:43 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக திகழ்ந்து 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

கடந்த 2004ல் தனுஷை திருமணம் செய்த ஐஸ்வர்யா யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்களை பெற்றெடுத்தார். மகிழ்ச்சியாக சென்ற இருவரின் வாழ்க்கையில் 18 ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வீடியோ.. | Aishwarya Rajinikanth Over Workout Video Post

மகன்களுக்காக இருவரும் சேர வேண்டும் என்று பலரின் கருத்தாக இருந்து வந்தது. இதனைதொடர்ந்து ஐஸ்வர்யா லால் சலாம் என்ற படத்தினை தன் அப்பா சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து படத்தினை ரிலீஸ் செய்தார்.

ஆனால் படம் ஓரளவிற்கு மட்டுமே வெற்றியை கண்டது. இதனையடுத்து சைக்கிளிங், ஜிம் ஒர்க்கவுட்களை செய்து ஃபிட்டாக இருந்து வருகிறார். தற்போது வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.