ஷூட்டிங்கில் கடுப்பேற்றிய மகள் ஐஸ்வர்யா!! கோபத்தில் திட்டிவிட்டு கிளம்பிபோன ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தன் மூத்த மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
மொய்தீன் பாய் ரோலில் நடிக்கும் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் போஸ்டர் வெளியாகி கிண்டலுக்கு ஆளானது. ஐஸ்வர்யாவை கடுமையாக விமர்சித்து வந்த நெட்டிசன்களுக்கு சமீபத்தில் ரஜினிகாந்தின் புது லுக்கில் மாற்றி அனைவரது வாயையும் அடைத்தார்.
மும்பையில் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் முன்னாள் மூத்த கிரிக்கெட் வீரர் கபில் தேவுடன் இணைந்து ரஜினிகாந்த் எடுத்த புகைப்படங்களையும் ஐஸ்வர்யா வெளியிட்டார்.
இந்நிலையில் கோபத்தில் 3 நாட்கள் மட்டுமே ஷூட்டிங்கில் இருந்த ரஜினிகாந்த் கோபத்தில் சென்னை வந்துவிட்டாராம். 3 நாட்கள் மட்டுமே நடித்த ரஜினிகாந்த் மற்ற நாட்களில் சும்மாவே இருந்துள்ளாராம். இதற்கு காரணம் ஐஸ்வர்யாவின் நிர்வாகத்தில் சிறு குளறுபடி ஏற்பட்டதால் கோபத்தில் ஐஸ்வர்யாவை திட்டிவிட்டு மும்பையில் இருந்து திரும்பிவிட்டாராம்.