விவாகரத்து விசயத்தை கண்டுகொள்ளாத ரஜினி மகள் ஐஸ்வர்யா.. இதுதான் நமக்கு முக்கியம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக 3 படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷின் ஆரம்பகால சினிமா கேரியரை ஆரம்பிக்கும் நிலையில் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா.
18 ஆண்டு திருமண வாழ்க்கை
இருவரும் திருமண வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து சினிமாவில் கவனம் செலுத்தியும் முன்னேறி வந்தனர். யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்களை பெற்றெடுத்து வளர்த்து வந்த நிலையில் 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரியவுள்ளதாக கடந்த ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் அறிவித்தனர். இந்த செய்தி உலகளவில் பெரிய பேசு பொருளாகவும் இதனால் சூப்பர் ஸ்டார் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதையெல்லாம தனுஷ், ஐஸ்வர்யா கண்டுகொள்ளாமல் சினிமாவில் கவனம் செலுத்தியும் வந்தனர். பிரிந்து வாழ்வதாக அறிவித்த 9 மாதம் கழித்து இரு வீட்டாரும் ரஜினிகாந்த் வீட்டில் மீட்டிங் போட்டுள்ளனர்.
ஐஸ்வர்யா ஒர்க்கவுட்
மீண்டும் தனுஷ் - ஐஸ்வர்யா இணையவுள்ளதாகவும் விவாகரத்து முடிவை விலக்கி வைக்கவுள்ளதாகவும் இணையத்தில் செய்திகளை பரவி வைரலானது. இந்நிலையில் இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த செய்திகளை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஒர்க்கவுட்டில் தீவிர ஈடுபாடு வைத்து வருகிறார். அப்படி கடினமாக உடற்பயிற்சி செய்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு மிரள வைத்துள்ளார்.
Stay motivated everyday
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) October 10, 2022
You have got this ! Smile ? and slay??
Love yourself come what may??
Think n feel this and nothing stands your way!#mondaymood pic.twitter.com/KKCCgHITOo