கடந்த இரண்டு வருடங்கள் என்னுடன் இருந்தது இது தான்.. தனுஷ் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா அதிரடி

Dhanush Tamil Cinema Aishwarya Rajinikanth
By Bhavya Dec 01, 2024 11:30 AM GMT
Report

ஐஸ்வர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமாகி பின் கடின உழைப்பாலும், திறமையாலும் இயக்குனர் என்ற பெயரோடு வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இவர் கடைசியாக லால் சலாம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சர்ச்சைகளை சந்தித்து வந்த ஐஸ்வர்யா கடந்த வாரம் நடிகர் தனுஷை விவாகரத்து செய்து கொண்டார்.

கடந்த இரண்டு வருடங்கள் என்னுடன் இருந்தது இது தான்.. தனுஷ் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா அதிரடி | Aishwarya Talk About Her Peace

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முன்பு பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா அதிரடி 

அதில், " கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்னவென்றால் தனிமை என்பது ஒரு வரம். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்கள் என்னுடன் இருந்தது இது தான்.. தனுஷ் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா அதிரடி | Aishwarya Talk About Her Peace

தனிமையாக இருப்பது தான் அதிக பாதுகாப்பு தர கூடிய ஒன்று என்பதை அறிந்து கொண்டேன். பலர் என்னிடம் வந்து தனிமையாக இருக்கும் போது BORE அடித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்பார்கள்.

ஆனால், நான் தனியாக இருக்கும்போது எனக்கு BORE அடித்தது இல்லை. அது எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்" என்று கூறியுள்ளார்.