கையில் சிகரெட்! புகையை ஊதிதள்ளியபடி போஸ்! நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்
தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் அறிமுகமாகி வருவது அதிகரித்து வருகிறது. முன்னணி நடிகைகள் முதல் குட்டி நட்சத்திரங்கள் வரை தமிழில் அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்தும் வருகிறார்கள்.
அந்தவரிசையில், மலையாள படமான மாயநதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழில் நடிகர் விஷாலின் ஆக்ஷன் படத்தில் நடித்து அறிமுகமாகியவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இதையடுத்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமாகியுள்ளார். தமிழில் அறிமுகமாகிய ஒருசில மாதத்தில் பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஐஸ்வர்யா லட்சுமி தற்போது சிகரெட் பிடித்து புகையை ஊதி தள்ளும் போஸில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
SMOKIN HOT ? pic.twitter.com/HNcHcNLTNz
— Aishwarya Lekshmi (@AishwaryaLeksh7) August 9, 2021