பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சண்டை? தல அஜித்தை பாலா மிரட்ட இதுதான் காரணம்? REWIND
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து பல லட்சம் ரசிகர்களை கொண்டு கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அஜித்குமார். தன்னை இயக்கும் இயக்குனர் மீது நல்ல மனப்பான்மை கொண்டவர் அஜித்.
அந்த வகையில் பாலா இயக்கத்தில் நான் கடவுள் வெளியாகி சில விமர்சனங்கள் கொண்டு ஓரளவுக்கு வெற்றி பெற்றது. அப்படத்தில் ஆர்யாவுக்கு பதில் முன்பே அஜித்திடம் பாலா பேசி பேச்சுவார்த்தை நடந்து சில நாள் படப்பிடிப்பும் நடைபெற்றும் இருந்தது.
இந்நிலையில், இயக்குனர் பாலா ஒரு நாத்திகவாதி ஆனால் அஜித் ஒரு ஆன்மீகவாதி என்பதால் இந்த கதை அஜித்துக்கு பிடிக்காமல் இருந்ததாம். மேலும் சில கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது நடந்து சண்டை அளவுக்கு சென்றதாம். மேலும் இயக்குனர் பாலா, அஜித்திடம் முழு கதையை கூறவில்லையாம்.
இதுதவிர அடிக்கடி தனது படங்களில் பாலா கதைகளை மாற்றுவது வழக்கம் என்பதால் அஜித் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என அட்வான்ஸ் வாங்கிய பின்னர் மறுத்துள்ளார்.