30 ஆண்டுகால சினிமா வாழ்க்கை! தல அஜித் முதன்முதலில் நடித்தது அமராவதி இல்லையா?

ajithkumar thalaajith amaravathi enveeduenkanavar
By Edward Aug 06, 2021 03:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருடன் தல என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் அஜித்குமார். அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அஜித் தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

தல அஜித் முதன் முதலில் அறிமுகமாகியது அமராவதி படமாகினாலும் அதற்கு முன் 1990ல் திரைக்கு வந்த என் வீடு என் கணவர் என்ற படத்தில் சினிமா வாழ்க்கையை தொடங்கியுள்ளாராம். அப்படத்தில் வரும் என் கண்மணி பாடலில் சைக்கிளில் வரும் பள்ளி மாண்வனாக நடித்துள்ளார் அஜித். இந்நிலையில், அஜித் இதுபற்றி அவரது பி ஆர் ஓ சுரேஷிடம் செய்தி ஒன்றினை பகிர்ந்துள்ளாராம்.

என் ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் ஒரே நாணயத்தின் மூன்று பகுதிகள். ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், பாரபட்சமில்லாத விமர்சனங்களை நடுநிலையாளர்களிடமிருந்தும் முழு மனதாக பாரபட்சமில்லாத ஏற்கிறேன்.

வாழுங்கள், வாழ விடுங்கள். என்றும் நிபந்தனையற்ற அன்புதான் என்று கூறியுள்ளார். இந்த வசனம் ரசிகர்கள் மனதில் தற்போது வரை ஆழமாக பதிந்துள்ளது என்பது தான் உண்மை.