விக்னேஷை ஒடவிட்டுட்டு அடுத்த இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ஏகே.. அஜித்தால் குழப்பத்தில் மகிழ் திருமேனி...

Ajith Kumar Vignesh Shivan Magizh Thirumeni
By Edward 1 மாதம் முன்
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக தன்னுடைய துணிவு படத்தை மோத விட்டு விஜய் மார்க்கெட்டை உடைத்தார்.

அதேபோல் அடுத்த படமும் அப்படியான ஒரு மாஸ் படமாக அமைய எதிர்பார்த்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தின் கதையை சொதப்பி லைக்கா மற்றும் அஜித்தின் கோபத்தை சம்பாதித்தார்.

பெரும்பாலும் அஜித் தன்னுடைய படத்தின் கதை உள்ளிட்ட அனைத்திலும் கவனம் செலுத்துவார். எதாவது குறை இருந்தால், அது எந்த பிரபலம் ஆனாலும் சரி தூக்கிவிடுவார்.

அப்படி 8 மாதம் அளவில் 62வது படத்தை கொடுத்ததும் தலைக்கனத்தில் இருந்த விக்னேஷை, கதை உருப்படியாக செய்யவில்லை என்று தூக்கி எறிந்து விட்டார். இதனால் யார் அஜித்தை இயக்குவது என்ற கேள்வி எழுந்த நிலையில் தடம் உள்ளிட்ட படத்தை இயக்கிய மகிழ் திருமேனியை கமிட் செய்தார் அஜித்.

ஆனால் இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகததற்கு முக்கிய காரணமே அஜித் தானாம். மகிழ் திருமேனி கூறிய கதையில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இல்லாமல் இருப்பதால் அதை சரி செய்து கொள்ளுங்கள் என்று அஜித் பல கண்டிஷனை போட்டு இருப்பதால் தானாம். அதெல்லாம் முடிந்து அதற்காக தயாராகி வர அஜித் சில காலம் எடுத்துப்பாரோ என்று ரசிகர்கள் புலம்பியும் வருகிறார்கள்.