கொஞ்சம் கூட மதிக்காமல் தூக்கி போட்ட அஜித்.. மொத்த வித்தையும் பாலிவுட்டில் இறக்கிய இயக்குனர்..

Ajith Kumar Nayanthara
By Edward Sep 03, 2022 06:26 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போதைய காலக்கட்டத்தில் எதார்த்தமான கதைக்களத்தோடு இயக்குவதில் கைத்தேர்ந்தவர்கள் பலர் வந்துவிட்டார்கள். அப்படி 2003ல் குறும்பு என்ற படத்தின் மூலம் இயக்குனராகி அறிந்தும் அறியாமலும், பட்டியல் உள்ளிட்ட கேங்க்ஸ்டர் படத்தினை இயக்கி வெற்றி கண்டார் விஷ்ணு வர்த்தன்.

பின் நடிகர் அஜித்தின் பில்லா படத்தினை இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்தார். நடிகர் அஜித்துக்கு மிகப்பெரிய படமாகவும் மார்க்கெட்டை உயர்த்த மிகமுக்கிய திரைப்படமாக இருந்தது.

அதன்பின் அஜித்தை வைத்து ஆரம்பம் படத்தையும் இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். படம் வெளியாகி 9 ஆண்டுகளாகிய நிலையில் எப்படியாவது அஜித்தை இயக்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்து வந்தார்.

இதனால் கடுப்பாகிய விஷ்ணுவர்த்தன் பாலிவுட்டில் சித்தார்த் மல்ஹோத்ராவை வைத்து கார்கில் போர் கேப்டன் விக்ரம் பாத்ரா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கினார். படமும் நல்ல வரவேற்பு பெற்று பிலிம்பேர் விருதினையும் வாங்கினார்.

இப்படி பாலிவுட்டில் கலக்கினாலும் அஜித்தை வைத்து படம் இயக்கும் கனவு அவருக்கு இருந்துள்ளதாம். ஆனால் அஜித் அந்த வாய்ப்பை கொடுக்காமல் கொடுத்த இயக்குனர்களுக்கே வாய்ப்பு வழங்கி ஏமாற்றத்தை கொடுத்து வருகிறார்.