அந்த படத்தில் நடிக்க முடியாமல் நழுவிய அஜித் மனைவி ஷாலினி! அதுவும் சூப்பர் ஸ்டார் படத்திலா!

star shalini super
By Jon Jan 22, 2021 06:03 PM GMT
Report

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் படத்தினை தன்னுடைய ஸ்டைலிஷ் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ரஜினி காந்த். இந்த வயதிலும் இப்படி நடிக்க முடியுமா என்று பலரின் கேள்விகளை தவிடுபுடியாக்கினார் சூப்பர் ஸ்டார். சமீபத்தில் அவர் நடித்த படங்கள் வசூல் அளவிலும் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது.

அந்தவகையில் 21 வருடங்களுக்கு முன் நடிகர் ரஜினி காந்த்தும் இயக்குநர் கேஎஸ் ரவிகுமாரும் முத்து படத்திற்கு பின் இணைந்த படம் படையப்பா. யாரும் எதிப்பார்த்திராத அளவிற்கு இப்படம் பெரிய மெகா ஹிட் கொடுத்தது. அப்படி அப்படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளிம் கதாபாத்திற்கேற்ப நடித்ததுதான் காரணம்.

அந்தவகையில் அப்படத்தில் கேஎஸ் ரவிகுமாரை, படத்தில் எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலப்படுத்தியது. ஆனால் படையப்பா படத்தில் கே எஸ் ரவிகுமார் நினைத்தபடி முக்கியமான நடிகர்களை நடிக்க வைக்க முடியாமல் போனதாக பின்னர் தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு முதலில் மீனா மற்றும் நக்மா ஆகியோர் பரிசீலனை செய்யப்பட்டு கடைசியாக அது ரம்யா கிருஷ்ணனை வந்து சேர்ந்தது. அதேபோல் ரஜினிக்கு தங்கச்சியாக நடித்த நடிகை சித்தாரா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர், தல அஜித் மனைவி ஷாலினி தானாம். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இளம் கதாநாயகியாக கலக்கியவர் ஷாலினி.

ஷாலினி ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக ராஜா சின்ன ரோஜா படத்தில் நடித்திருந்தார். முதலில் ரஜினியின் தங்கையாக அஜீத் மனைவி ஷாலினி நடிக்க வைக்க நினைத்தாராம் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். ஆனால் ஷாலினி பல படங்களில் பிஸியாக இருந்ததால் படையப்பா படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

பின்னர் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து ஷாலினி மிகவும் வருத்தப்பட்டதாக தல வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.