பிரபல நடிகரிடம் கெட்ட பழக்கத்தை விட சொன்ன அஜித்.. இப்படியொரு விஷயம் நடந்ததா

Ajith Kumar
By Kathick Nov 10, 2024 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அஜித் குறித்து பிரபல நடிகர் ரோபோ ஷங்கர் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் "ஒரு முறை என்னிடம் தம் அடிக்க போறீங்களா என அஜித் கேட்டார். ஆம் என நான் கூறியபின், அதற்கு அவர் அந்த தம்-ஐ என்னிடம் குடுங்க என கேட்டார். அந்த தம்-ஐ என்னிடம் இருந்து வாங்கி பார்த்துக்கொண்டே இருந்தார்.

பிரபல நடிகரிடம் கெட்ட பழக்கத்தை விட சொன்ன அஜித்.. இப்படியொரு விஷயம் நடந்ததா | Ajith Kumar Give Up Cigarette Habit 8 Years

'எப்படியெல்லாம் சிகரெட் பிடித்துக்கொண்டு இருந்தேன் தெரியுமா' என அஜித் கூறினார். அந்த சிகரெட்டை அப்படியே அவரிடம் இருந்து வாங்கி, அதனை பத்திரமாக வைத்திருக்கிறேன்.

அதன்பின் தான் அஜித் சார் சொன்னார், நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 8 வருடங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நீங்களும் இதை விட்டுவிடுங்கள் ஷங்கர்" என அஜித் கூறியதாக ரோபோ ஷங்கர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.