எங்க தாலியை ஏன் அறுக்குறீங்க ஆதிக்!! குட் பேட் அக்லியை வெச்சு செய்த ப்ளூ சட்டை..

Ajith Kumar G V Prakash Kumar Blue Sattai Maran Adhik Ravichandran Good Bad Ugly
By Edward Apr 11, 2025 06:30 AM GMT
Report

குட் பேட் அக்லி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நேற்று ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி படம் செம மாஸாக வெளியாகியது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் தாஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படத்தை முதல் நாள் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் குட் பேட் அக்லி படத்தினை விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

எங்க தாலியை ஏன் அறுக்குறீங்க ஆதிக்!! குட் பேட் அக்லியை வெச்சு செய்த ப்ளூ சட்டை.. | Ajith Kumar Good Bad Ugly Blue Sattai Maran Review

ப்ளூ சட்டை மாறன்

அதில், தன் மகனுக்காக, தான் செய்த தவறுகளை எல்லாம் ஒத்துக் கொண்டு, ஜெயிலுக்குப் போகிறார். ஜெயிலுக்கு போனவர் 18 ஆண்டுகளுக்குப் பின் வெளியே வரம்போது, மகனின் 18வது பிறந்த நாளில் கலந்து கொள்ளலாம் என வெளியே வருகிறார். அஜித் வெளியே வரும்போது அவரது மகன் போதைப்பொருள் வழக்கில் சிறைக்கு செல்கிறார்.

எங்க தாலியை ஏன் அறுக்குறீங்க ஆதிக்!! குட் பேட் அக்லியை வெச்சு செய்த ப்ளூ சட்டை.. | Ajith Kumar Good Bad Ugly Blue Sattai Maran Review

தன் மகன் மீது திட்டமிட்டு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிட்டதால், மகனைக் காப்பாற்ற, எந்த கேங்ஸ்டர் தொழிலை விட்டாரோ, அதே கேங்ஸ்டர் தொழிலை கையில் எடுக்கிறார், அதன்பின் என்ன நடப்பதுதான் கதை. படத்தில் கதையோ திரைக்கதையோ எந்த டெவலப்பும் இருக்காது. கதையில் எந்த உயிரும் இருக்காது.

ஃபேன் பாய்

டான் என்றால் படிக்கட்டுகளில் ஏற வேண்டும், இருக்க வேண்டும் என்பதைப் போல், ஃபேன் பாய் என்றால் இப்படிப் படம் எடுத்து உயிரை வாங்குவார்களாம். ' நீங்க ஃபேன் பாயாக இருந்தால் அத காலத்தில் மன்னர்களை புகழ்ந்து பாடி புலவர்கள் பரிசு வாங்கிக் கொண்டு இருப்பார்கள் அல்லவா? அதுபோல வாங்கிட்டு போங்க. அல்லது, முருகரைப் பார்த்ததும் ஔவையார் பாடியதைப் போல பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா என பாடல் பாடியது போல, அஜித் வீட்டு வாசலில் உட்கார்ந்து பாடிவிட்டு, பரிசு கிடைத்தால் வாங்கிட்டு போங்க.

எங்க தாலியை ஏன் அறுக்குறீங்க ஆதிக்!! குட் பேட் அக்லியை வெச்சு செய்த ப்ளூ சட்டை.. | Ajith Kumar Good Bad Ugly Blue Sattai Maran Review

பாடல்கள்

அதை விட்டுவிட்டு ஃபேன் பாய் என்றால் இப்படித்தான் படம் எடுப்பார்கள் என எங்க தாலியை ஏன் அறுக்கிறீர்கள்?'. படம் முழுக்க ரெஃபரன்ஸ் ரெஃபரன்ஸ்ன்னு போட்டு சாவடித்துவிட்டார்கள். டம் முழுக்க பழைய பாட்டை போட்டு சாகடித்து விட்டார்கள்.

அதுவும் முழு முழு பாடல்கள் போட்டுவிட்டார்கள், மப்சல் பஸ்ஸில் வெளியூருக்கு போயிட்டு வந்தது போல இருந்தது. படம் உருப்புடாது என்பதற்கு 9 பொருத்தமும் பொருந்தி இருக்கு. யோகி பாபு வந்தார் 10வது பொருத்தமும் பொருந்திவிட்டது என்று பங்கமாக கலாய்த்து விமர்சித்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். இதனை அஜித் ரசிகர்கள் பலரும் பார்த்து ப்ளூ சட்டை மாறனை திட்டித்தீர்த்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.