ரேஸில் அஜித் கார் டயர் வெடித்து விபத்து.. என்ன ஆனது? பதறும் ரசிகர்கள்
அஜித்
நடிகர் அஜித் தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு கார் ரேஸில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லீ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதற்கு பிறகு அஜித் எந்த படமும் அறிவிக்காமல் இருக்கிறார்.
இந்த வருடத்தின் இறுதியில் தான் அவர் மீண்டும் படங்கள் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ஐரோப்பிய GT 4 ரேஸில் பங்கேற்று வருகிறார்.
என்ன ஆனது?
இந்நிலையில், ரேஸில் அஜித்தின் கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டு உள்ளது. டயர் வெடித்ததும் அவர் உடனே ட்ராக்கில் இருந்து வெளியேறி காரை மெதுவாக எடுத்து சென்றுவிட்டார்.
இதனால் காரின் முன்பக்கத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.