அஜித்துக்காக மேனேஜர் படிபடியா ஏறி இறங்குகிறாராம்..விஜய்க்கு லைனில் நிக்குறாங்க!! பிரபலம்..
விஜய்
நடிகர் விஜய் முழு அரசியலில் ஈடுபடவுள்ளதால் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தோடு சினிமாவில் இருந்து விலகவுள்ளார். அவர் நடிப்பில் ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் சேக்குவாரா ஜெய்சங்கர் அளித்த பேட்டியொன்றில், விஜய் பற்றி படுபயங்கரமாக விமர்சித்து பேசியுள்ளார்.

சேக்குவாரா ஜெய்சங்கர்
அதில், சிலர் கூறுகிறார்கள், அஜித்துக்கு படமே இல்லை, தயாரிப்பாளர் யாரும் வரவில்லையாம். மேனேஜர் சுரேஷ் சந்திரா, ஒவ்வொரு கம்பெனியா போய்ட்டு வருகிறாராம். தல-ன்னு சொன்னால், 20 தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்பார்கள். அவனுங்க சொல்றானுங்க, சுரேஷ் சந்திரா படிபடியா ஏறி இறங்குகிறாராம்.
சரி இருக்கட்டும், இவருக்கு(விஜய்க்கு) எப்படி?. அவனுக்கு யாரும் வராததால் தான் சொந்த பணத்தை ஜெகதீஷை, பினாமியாக போட்டு படம் எடுக்கிறான்.

என்னமோ, அவன் படத்தை ஏவிஎம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கிற மாதிரி பேசுறீங்க. என்னோ அஜித்துக்கு யாரும் வரலையாம், அவனுக்கு வர்றாங்கன்னு சொல்றாங்க. அதுல 200 கோடியை விட்டுவிட்டு வந்தாருன்னு சொல்றாங்க.
முதலில் அவர் விக் வெக்கும் போது, கலவரதுக்கு ஒரு விக், சோகத்துக்கு ஒரு விக், ஆர்பாட்டத்திற்கு ஒரு விக். முதலில் ஒரு விக்கை ஒழுங்காக போடுங்க என்று சரமாரியாக பேசியிருக்கிறார் பத்திரிக்கையாளர் சேகுவாரா ஜெய்சங்கர்.
பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள தகவல் அனைத்து பத்திரிக்கையாளர் சேகுவாரா ஜெய்சங்கர் கூறியதுதான். அவர் கூறிய கருத்துக்கும் விடுப்பு தளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.