அஜித்துடன் பைக்கில் ஊர்சுற்றும் 43 வயது நடிகை.. புகைப்படத்தை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Ajith Kumar Manju Warrier Viral Photos
By Edward Sep 06, 2022 09:35 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். தற்போது ஏகே 61 படத்தில் எச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது அதில் பை ரைடில் உலகம் முழுவதும் சமீபகாலமாக சுற்றி வருகிறார்.

அதே சமயம் துப்பாக்கி சுடும் போட்டியில் கூட கலந்து கொண்டு வைரலானார். இந்நிலையில் அஜித் கடந்த வாரம் பைக் ரைட் செல்லும் புகைப்படம் பரவி வந்த நிலையில் அவருடன் ஏகே 61 படத்தின் கதாநாயகி மஞ்சுவாரியரும் கலந்து கொண்டுள்ளார்.

மிகப்பெரிய விலையுயர்ந்த பைக்கை ஓட்டும் புகைப்படம் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தார் மஞ்சுவாரியர். தற்போது ஒரு சர்ச்சையை இணையத்தில் நெட்டிசன்கள் பரப்பி வருகிறார்கள்.

அதாவது அஜித் ஓட்டும் பைக் நம்பர் எண்ணை பார்த்து, அப்பைக்கின் இன்சூரன்ஸ் காலாவதி ஆகிவிட்டதாகவும் இப்படியா நடந்து கொள்வது அஜித் என்றும் விமர்சித்து வந்தனர்.

ஆனால் இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டுள்ளார். அப்படி ஒன்றும் இல்லை என்று அஜித் தரப்பில் கூறப்பட்டுள்ளதாம்.