ஒருபக்கம் அஜித் தாயார் மறைவு..மறுபக்கம் அனாதையாக இறந்த சத்யேந்திரா!! சமூகத்தின் இரட்டை முகம்?

Ajith Kumar Tamil Cinema Death Cinema News
By Jai Jun 01, 2026 02:30 AM GMT
Report

திரைத்துறையை சார்ந்த இரு மரணச் செய்திகள் ரசிகர்கள் மத்தியிலும் தமிழ்நாட்டு மக்களிடத்திலும் பெரும் சோகத்தை ஒரே வாரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணி மறைவு ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அனாதையாக உயிரைவிட்ட நடிகர் சத்யேந்திராவின் மரணம்.

ஒருபக்கம் அஜித் தாயார் மறைவு..மறுபக்கம் அனாதையாக இறந்த சத்யேந்திரா!! சமூகத்தின் இரட்டை முகம்? | Ajith Mother Death And Sathyendra Lonely Farewell

அஜித் தாயார் - சத்யேந்திரா

இவ்விரு மரணமும் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் பேசப்பட்ட நிலையில் அவற்றை சமூகம் அணுகிய விதம் பற்றிதான் தற்போது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அஜித் தாயாரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்தும் நேரில் சென்று ஆறுதல் கூறியும் வந்தார்கள்.

ஒருபக்கம் அஜித் தாயார் மறைவு..மறுபக்கம் அனாதையாக இறந்த சத்யேந்திரா!! சமூகத்தின் இரட்டை முகம்? | Ajith Mother Death And Sathyendra Lonely Farewell

ஆனால் உலக சினிமா, இலக்கியம், திரைப்பட வரலாறு ஆகியவற்றில் ஆழமான அறிவு கொண்டவராக திகழ்ந்து பிரபலமான நடிகை சத்யேந்திராவை யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை.

சுமார் 150 படங்களில் நடித்தவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் இயங்கியவர் இறுதியில் உதவும் கரங்கள் அனைப்பின் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுதான் சோகமான இரு விஷயம். இதனை கவனித்த சிலர் யாரை மறந்து விடுகிறோம்? யாரை நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.