அஜித்தின் ரீல் தம்பிக்கு இரண்டாம் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து பல கோடி ரசிகர்கள் பட்டாளத்தால் கொண்டாடப்படும் நடிகராக விளங்கி வருபவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் ஒரே இயக்குநருக்கு தொடர்ந்து பல படங்களை கொடுத்து வந்தார். அது தோல்வியாக இருந்தாலும் நானிருக்கிறேன் என்று ஆறுதலாக கூறி படங்களில் நடித்து கொடுப்பார்.
அந்தவரிசையில் இருக்கும் இயக்குநராக இருந்தவர் சிறுத்தை சிவா. கார்த்தியின் சிறுத்தை படத்திற்கு பிறகு, தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் படத்தினை இயக்கினார்.
வீரம் படத்தில் தன் தம்பி பாலாவையும் அஜித்திற்கு தம்பியாக நடிக்கவைத்தார். நடிகர் பாலா பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது தமிழ் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் சிறுத்தை சிவாவின் தம்பி பாலாவிற்கு இரண்டாம் திருமணம் நடைபெற்றுள்ளது. அம்ருதா சுரேஷ் என்பவரை 2010ல் திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக 2019ல் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இதையடுத்து, கேரளாவை சேர்ந்த மருத்துவர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

