அஜித்குமாருக்கு நடிக்கவே தெரியாது, வாழ்க்கைல நடிப்பார்!! வன்மத்தை கக்கிய கமல் பட தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி நடிக்கவுள்ளார். அஜித் பற்றி பலர் பலவிதமாக பாராட்டினாலும் சிலர் அவரை பற்றி விமர்சித்து வருவதும் உண்டு.
அப்படி பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அஜித்தை பற்றி விமர்சித்து பேசியது சர்ச்சையாகியுள்ளது. தமிழில் கூலி, மாண்புமிகு மாணவன், சீனு, கமல் ஹாசனின் வேட்டையாடு விளையாடு, வித்தகன் போன்ற படங்களை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன்.
இப்படம் பல ஆண்டுகள் கழித்து ரீரிலிஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அஜித் குமார்ன்னு ஒரு நடிகர் இருக்காரு, அவருக்கு நடிக்க தெரியாது ஆனால், வாழ்க்கையில் நடிப்பாரு என்றும் ஊருக்காக வாழமுடியாதுங்க நம்பங்களுக்காக வாழுங்க என்று விமர்சித்து பேசியுள்ளார்.
அவர் இப்படி பேசியது அஜித் ரசிகர்கள் மத்தியில் கோபத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் மகிழ்திருமேனி பற்றி உண்மை அனைத்தையும் சொல்ல முடியாது. அவர் எனக்கு பண்ணதுக்கு எந்த கமெண்ட்டும் அடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் மாணிக்கம் நாராயணன்.