அந்த நிகழ்ச்சியில் நானா! உண்மையை உடைத்த 16 வயதான அஜித்தின் ரீல்மகள் அனிகா..

ajith television anikha Survivor SurvivorTamil
By Edward Sep 04, 2021 10:00 AM GMT
Report

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். இதையடுத்து மீண்டும் அஜித் - நயன் தாராவிற்கு மகளாக விசுவாசம் படத்தின் மூலம் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

இதையடுத்து, போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா 15 வயதில் க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகினார். சமீபத்தில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டு தற்போது தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்க இருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறீர்களா? என்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

அதற்கு அனிகா, சர்வைவர் நிகழ்ச்சியில் நானா? யார் சொன்னது என்றும், அப்படியெல்லாம் கிடையாது எந்த ஒரு ரியாலிட்டி ஷோக்களிலும் நான் செல்லவில்லை என்று கூறியுள்ளார். மாமனிதன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன்நடித்து வருகிறார் அனிகா சுரேந்திரன்.