ஒரே நடிகையை காதலித்த அஜித், சரத்குமார்.. ஒருவருக்கு மட்டும் நோ சொல்லிய நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதை நாம் அறிவோம்.
ஆனால், ஷாலினிக்கு முன் நடிகை ஹீராவை துரத்தி துரத்தி காதலித்துள்ளார். ஆம், அவருக்காக இரவெல்லாம் கண்விழுது காதல் கடிதம் எல்லாம் எழுதியுள்ளார் அஜித். ஆனால், நடிகை ஹீரா அஜித்துக்கு ரெட் சிக்னல் காட்டி விட்டார். அஜித்தின் இந்த காதல் ஒரு தலை ராகமாகவே முடிந்துவிட்டது. அஜித் மற்றும் ஹீரா இணைந்து இரு திரைப்படங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தை போலவே நடிகை ஹீராவை நடிகர் சரத்குமாரும் காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் சில வருடங்கள் ஒன்றாக காதலித்துள்ளார்கள். இதன்பின் ஹீரோவை பெண் கேட்டு அவருடைய வீட்டிற்கு சரத்குமார் சென்றுள்ளார். ஆனால், அதன்பின் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. அங்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை.