தலதான் என் லைஃப்! வேம்புலியின் வாழ்க்கையில் வாத்தியாராக மாறிய நடிகர் அஜித்..

arya sarpattaparambarai paranjith vembuli
By Edward Aug 16, 2021 04:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடைபெற்றும் நல்ல வரவேற்பு விமர்சனங்களை பெற்று வந்த படம் சார்பட்டா பரம்பரை. ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களையும் கவர்ந்து வந்த படம் சார்பட்டா. ஆர்யா,சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து பெரிய ஹிட் கொடுத்து வருகிறது.

இப்படத்தில் கபிலன், வேம்புலி, டான்சிங் ரோஸ், வாத்தியார், வெற்றி, மாரியம்மா கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் கபிலன் வாத்தியாரை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செல்லும் காட்சியை வைத்து நெட்டிசன்கள் மீன்ஸ் கிரியேட் செய்து வைரலாக்கினர். இந்நிலையில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்தவர் மலையாள நடிகர் ஜான் கொக்கன். நடிகை பூஜா ராமசந்திரனின் கணவராவார்.

இதற்கு முன் நடிகர் அஜித்தின் வீரம் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார் ஜான் கொக்கன். சமீபத்தில் அஜித் தான் என் வாழ்க்கை. அஜித்சார் தான் என்னோட வாத்தியார் என்று பதிவிட்டுள்ளார். மேலும், வேம்புலி கேரக்டரின் வெற்றியை அஜித்திற்கு சமர்பிப்பதாகவும் பதிவிட்டுள்ளார் ஜான்.

என் வாழ்க்கையில் வீரம் படத்தில் நடிக்கும் போது என்னை ஊக்கப்படுத்தியதாகவும் வாழ்க்கையை பற்றி கற்றுக்கொடுத்தாகவும் உணர்வு பூர்வமாக கூறி பதிவிட்டுள்ளார் ஜான் கொக்கன்.