அஜித் மச்சினிச்சி ஷாமிலியா இது!! முகம் சுருங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..
Ajith Kumar
Shalini
Shamlee
Tamil Actress
Actress
By Jai
நடிகை ஷாமிலி
1990ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான படம் அஞ்சலி. இப்படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை ஷாமிலி.

தனது அக்கா நடிகை ஷாலினிக்கு பிறகு சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் ஷாமிலி.
பல மொழிகளில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி, 2009ல் ஓய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
ஒருசில படங்களில் மட்டும் நடித்தப்பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஆர்வத்தை ஈடுப்படுத்தி வந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாமிலி, தற்போது வெளியிட்ட ஸ்டோரிஸ் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முகம் சுருங்கியபடி இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஏன் என்ன ஆச்சு என்று கேட்டு வருகிறார்கள்.