ரசிகரை ஓங்கி கன்னத்தில் அடித்துவிட்டு மொட்டை அடித்த அஜித்.. ஏகேவின் உண்மை முகத்தை உடைத்த நடிகை..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார், மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தி நடித்து வருகிறார். பல மாதங்களாக ஷூட்டிங் சென்று கொண்டிருக்கும் நிலையில் அஜித் ஸ்டைலாக நின்று எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது.
மேலும் அஜித்தை பற்றிய பல விசயங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருவதை தொடர்ந்து நடிகை ஆர்த்தி, அஜித் எப்படிப்பட்டவர் என்று கூறி ஒரு சம்பவத்தை தெரிவித்திருத்துள்ளார். ஒருமுறை ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது ரசிகர்கள் கூட்டத்தில் ஒரு ரசிகர் தலையில் தல என்று முடிவெட்டி இருந்ததை காட்டி காட்டி கத்திக்கொண்டிருந்தான்.
இதை கவனித்த அஜித், உள்ளே அனுப்ப சொல்லி போலிசிடம் சொல்லி அந்த ரசிகரை அழைத்திருக்கிறார். ஓடிவந்தவனை பளார் என்று அடித்துவிட்டு போய் மொட்டை அடிச்சிட்டு வா.. மொட்டை அடிச்சிட்டு என்னிடம் காட்டு என்று அசிஸ்டண்ட்-ஐ அனுப்பி மொட்டை அடிக்க வைத்தார்.
அதன்பின் அவனுடன் போட்டோ எடுத்துவிட்டு, அதென்ன தலைன்னு தலையில் எழுதி காட்டுறது, அன்பு ம்னசுல இருந்தால் போது, இதெல்லாம் பண்ணாத, உங்க அப்பா அம்மாவுக்கு பிடிக்குமா என்று கூறி அனுப்பி வைத்திருக்கிறர் அஜித் குமார். நடிகை ஆர்த்தி பேசிய குறித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
தல ன்னு பச்சை குத்திக்குறது, தல ன்னு ஹேர் கட் பண்றது,
— ?Harry Billa? (@Billa2Harry) February 12, 2024
இந்த மாரி Extreme விஷயங்களை Encourage பண்ணாத ஒரே நடிகன் ♥️
தன் ரசிகனா சக மனுஷனா பார்த்து நல் வழி செய்யுற ஒரு நல்லா மனிதன் #AjithKumar ♥️#VidaaMuyarchi .. #AjithKumarpic.twitter.com/YAFzPnFY7B